• Apr 08 2025

யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

Chithra / Apr 7th 2025, 8:10 am
image

 

பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை, நகரங்களில் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இடங்களில் பணியில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், குறித்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெற அழைத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை  பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இந்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை, நகரங்களில் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.மேலும், அந்த இடங்களில் பணியில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், குறித்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெற அழைத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement