நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
நாப்தாவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளும் ஏப்ரல் 12 ஆம் திகதி காலை நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்த மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும்,
நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை மற்றும் செயல்பாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஏப்ரல் விடுமுறை நாட்களில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மின்சார சபை, மின் பயன்பாடு அதிகமாக இல்லாத சந்தர்ப்பங்களில், மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் மின்சார சபை வௌியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
நுரைச்சோலையில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார். நாப்தாவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளும் ஏப்ரல் 12 ஆம் திகதி காலை நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்த மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை மற்றும் செயல்பாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஏப்ரல் விடுமுறை நாட்களில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மின்சார சபை, மின் பயன்பாடு அதிகமாக இல்லாத சந்தர்ப்பங்களில், மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் மின்சார சபை வௌியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.