இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் – ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரோகித் – ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய ரோகித் 41 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ரோகித் சதமும் ரிங்கு சிங் அரை சதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கு 213 ஓட்டங்கள் இலக்கு. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் – ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரோகித் – ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய ரோகித் 41 பந்துகளில் அரை சதம் விளாசினார்.தொடர்ந்து விளையாடிய ரோகித் சதமும் ரிங்கு சிங் அரை சதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.