• Nov 10 2024

இராணுவ கட்டுபாடுகளுடன் சுமார் 34 வருடங்களின் பின் வழிபாட்டுக்காக செல்லும் வலி.வடக்கு மக்கள்!

Chithra / Feb 23rd 2024, 10:19 am
image

 

சுமார் 34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி ஆலைய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.

இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தின் பேரூந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதேநேரம் பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 


இராணுவ கட்டுபாடுகளுடன் சுமார் 34 வருடங்களின் பின் வழிபாட்டுக்காக செல்லும் வலி.வடக்கு மக்கள்  சுமார் 34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.அதன்படி ஆலைய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தின் பேரூந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதேநேரம் பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement