• Sep 20 2024

முயற்சிக்கு வயது தடையில்லை: 71வயதிலும் சாதனை படைக்கும் சிங்கப் பெண்!

Sharmi / Jan 19th 2023, 4:11 pm
image

Advertisement

முள்ளியவளை வித்தியானந்தா பரிசளிப்பு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட முள்ளியவளையைச் சேர்ந்த 5000மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 71வயது பெண்மணி  தனது சாதனை பயணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

முள்ளியவளையில் 1951.02.07 செல்லப்பா சிவகொழுந்து தம்பதிகளிற்கு ஆறாவது புதல்வியாக பிறந்தேன்.  எனது ஆரம்ப கல்வியினை கலைமகள் வித்தியாலயத்தில், வித்தியானந்தாவிலும் பயின்றேன். 

படிக்கும் காலத்திலே விளையாட்டில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தேன். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். இருவருக்கும் திருமணமாகி  ஒருவர் லண்டனிலும் மற்றவர் கனடாவிலும் வசிக்கின்றனர். நான்கு பேரப்பிள்ளைகள் உள்ளார்கள். 

சிறைச்சாலையில் பெண் அதிகாரியாக கடமையாற்றியுள்ளேன்.சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வமுள்ளதால் 5000, 1500, 800,மீட்டர் ஆகிய ஓட்டங்களில்  ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தும் பங்கு பற்றி வருகின்றேன். 

இந்த முறை உடுப்பியில்  சென்ற மாதம்  9 மற்றும் 10 ஆம் திகதி இடம்பெற்ற விளையாட்டில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். 

முதலாமிடம் பெற்று மூன்று தங்கபதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் என்வசமாகியுள்ளேன். கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சுகதாச ஸ்ரேடியதில் 5000,1500,800 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் பங்கு பற்றியிருந்தேன். 

400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கொழும்பு மாவட்டத்தில் முதல் இடத்தில்  திகழ்ந்த சில்வா அவர்களை வென்றுள்ளேன். 5000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2023 ஆண்டு  புதிய சாதனை ஒன்றினை பதிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.




முயற்சிக்கு வயது தடையில்லை: 71வயதிலும் சாதனை படைக்கும் சிங்கப் பெண் முள்ளியவளை வித்தியானந்தா பரிசளிப்பு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.இந்நிலையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட முள்ளியவளையைச் சேர்ந்த 5000மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 71வயது பெண்மணி  தனது சாதனை பயணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,முள்ளியவளையில் 1951.02.07 செல்லப்பா சிவகொழுந்து தம்பதிகளிற்கு ஆறாவது புதல்வியாக பிறந்தேன்.  எனது ஆரம்ப கல்வியினை கலைமகள் வித்தியாலயத்தில், வித்தியானந்தாவிலும் பயின்றேன். படிக்கும் காலத்திலே விளையாட்டில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தேன். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். இருவருக்கும் திருமணமாகி  ஒருவர் லண்டனிலும் மற்றவர் கனடாவிலும் வசிக்கின்றனர். நான்கு பேரப்பிள்ளைகள் உள்ளார்கள். சிறைச்சாலையில் பெண் அதிகாரியாக கடமையாற்றியுள்ளேன்.சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வமுள்ளதால் 5000, 1500, 800,மீட்டர் ஆகிய ஓட்டங்களில்  ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தும் பங்கு பற்றி வருகின்றேன். இந்த முறை உடுப்பியில்  சென்ற மாதம்  9 மற்றும் 10 ஆம் திகதி இடம்பெற்ற விளையாட்டில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். முதலாமிடம் பெற்று மூன்று தங்கபதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் என்வசமாகியுள்ளேன். கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சுகதாச ஸ்ரேடியதில் 5000,1500,800 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் பங்கு பற்றியிருந்தேன். 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கொழும்பு மாவட்டத்தில் முதல் இடத்தில்  திகழ்ந்த சில்வா அவர்களை வென்றுள்ளேன். 5000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2023 ஆண்டு  புதிய சாதனை ஒன்றினை பதிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement