• May 05 2025

இன்று முதல் சுட்டெரிக்கப்போகும் அக்னி நட்சத்திரம்; வெளியில் செல்வதை தவிர்க்கவும்

Chithra / May 4th 2025, 7:44 am
image


அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து கோடை வெப்பம் தீவிரமடைந்து வருகிறது. மே மாத தொடக்கத்திலேயே கடுமையான வெயில் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் நெருங்கிவிட்டதால், குறிப்பாக கடலோர மாவட்டங்களில், வெப்ப அலை நிலைமைகள் மோசமடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, 

மேலும், பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சூரியன் உச்சத்தில் இருக்கும் ​​மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

அவசியம் வெளியில் செல்ல நேரிடும்போது, பாதுகாப்புக்காக குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதையும், வெய்யில் உச்சமடையும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

வெய்யிலில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வது கூடாது.

உடலில் நீர்ச்சத்து குறைவதற்குக் காரணமாக கோப்பி, டீ மற்றும் மதுபானங்களை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூடான தரையில் வெறுங்காலுடன் நடப்பதையும், அதிக புரதம் அல்லது காலாவதியான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். 

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 


இன்று முதல் சுட்டெரிக்கப்போகும் அக்னி நட்சத்திரம்; வெளியில் செல்வதை தவிர்க்கவும் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து கோடை வெப்பம் தீவிரமடைந்து வருகிறது. மே மாத தொடக்கத்திலேயே கடுமையான வெயில் பதிவாகியுள்ளது.அக்னி நட்சத்திரம் நெருங்கிவிட்டதால், குறிப்பாக கடலோர மாவட்டங்களில், வெப்ப அலை நிலைமைகள் மோசமடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, மேலும், பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.சூரியன் உச்சத்தில் இருக்கும் ​​மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.அவசியம் வெளியில் செல்ல நேரிடும்போது, பாதுகாப்புக்காக குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதையும், வெய்யில் உச்சமடையும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.வெய்யிலில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வது கூடாது.உடலில் நீர்ச்சத்து குறைவதற்குக் காரணமாக கோப்பி, டீ மற்றும் மதுபானங்களை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சூடான தரையில் வெறுங்காலுடன் நடப்பதையும், அதிக புரதம் அல்லது காலாவதியான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement