• May 01 2025

அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச அறைகூவல்

Thansita / May 1st 2025, 5:32 pm
image

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக, அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும். என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கூவலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 ' மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

 மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் இல்லை. பாதாளக்குழுக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. வீட்டுக்குள்ளும், நடுத்தெருவிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றத்துக்குள்கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைமைக்காணப்படுகிறது. காட்டாட்சியே நாட்டில் நிலவுகின்றது.' - என்றார்.

அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச அறைகூவல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக, அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும். என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கூவலை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர்.எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்.நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் இல்லை. பாதாளக்குழுக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. வீட்டுக்குள்ளும், நடுத்தெருவிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றத்துக்குள்கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைமைக்காணப்படுகிறது. காட்டாட்சியே நாட்டில் நிலவுகின்றது.' - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement