• May 02 2025

தெதுரு ஓயாவில் விபரீதம்: மாயமான இளைஞர்கள்..!

Sharmi / May 2nd 2025, 11:24 am
image

சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் நேற்று மாலை காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்கள் குழுவுடன் கண்டியிலிருந்து சிலாபம் பகுதிக்கு ஒரு பொழுதுபோக்குப் பயணமாகச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களைக் கண்டுபிடிக்க சிலாபம் காவல்துறை, இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தெதுரு ஓயாவில் விபரீதம்: மாயமான இளைஞர்கள். சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் நேற்று மாலை காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்கள் குழுவுடன் கண்டியிலிருந்து சிலாபம் பகுதிக்கு ஒரு பொழுதுபோக்குப் பயணமாகச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.இந்நிலையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களைக் கண்டுபிடிக்க சிலாபம் காவல்துறை, இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement