• Nov 28 2024

கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கை - இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை..! samugammedia

Tamil nila / Dec 14th 2023, 6:47 am
image

அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கை - இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை. samugammedia அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement