• Apr 26 2024

யாழில் இருவருக்கு எயிட்ஸ் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

harsha / Dec 1st 2022, 10:46 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எயிட்ஸ் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச் ஐ வி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பாலியல் தொற்று தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கலாநிதி றெகான், மற்றும் வவுனியா பொது மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த பட்டகலு  ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மருத்துவ கலாநிதி றெகான்  தெரிவிக்கையில்:

நாடளாவிய ரீதியில் 411 பேர் இந்த ஆண்டு எச் ஐ வி யுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச் ஐ வி தொற்று ஏற்படக் கூடிய இடங்களில் விசேட  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எச் ஐ வி தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த ஆண்டு தொற்றுடன்  அடையாளங் காணப்பட்ட இருவரும் 30 வயது உடையவர்கள்.

இந்த விடயம் தொடர்பில் மருத்துவர் பட்டகலு பிரியந்த தெரிவிக்கையில்:

 எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதன் ஊடாக தொற்றின்  பாதிப்பை வைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய நிலையிலேயே அடையாளம் காணப்படுகின்றனர் என்றார்.

யாழில் இருவருக்கு எயிட்ஸ் - அதிர்ச்சியில் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எயிட்ஸ் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச் ஐ வி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பாலியல் தொற்று தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கலாநிதி றெகான், மற்றும் வவுனியா பொது மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த பட்டகலு  ஆகியோர் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மருத்துவ கலாநிதி றெகான்  தெரிவிக்கையில்:நாடளாவிய ரீதியில் 411 பேர் இந்த ஆண்டு எச் ஐ வி யுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச் ஐ வி தொற்று ஏற்படக் கூடிய இடங்களில் விசேட  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எச் ஐ வி தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த ஆண்டு தொற்றுடன்  அடையாளங் காணப்பட்ட இருவரும் 30 வயது உடையவர்கள்.இந்த விடயம் தொடர்பில் மருத்துவர் பட்டகலு பிரியந்த தெரிவிக்கையில்: எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வதன் ஊடாக தொற்றின்  பாதிப்பை வைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய நிலையிலேயே அடையாளம் காணப்படுகின்றனர் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement