• Sep 21 2024

அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவன் பொலிஸ் கடேற் சார்ஜனாக பதவியுயர்வு!

Sharmi / Jan 16th 2023, 10:20 pm
image

Advertisement

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன்  அப்துல் நிஸார் ஷராபத் இஸ்னி பொலீஸ் கடேற் பிரிவில் சார்ஜன் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் கல்வி   அமைச்சு  என்பன இணைந்து பாடசாலை மாணவர்களை ஆளுமை உள்ளவர்களாக ஆக்குவதுடன் அவர்களை நாட்டுக்கு சிறந்த நற்பிரஜைகளாக மாற்றி அமைத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்திக்கொண்டிருக்கும் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியில் (National Cadet Corps) பொலீஸ் கடேற் பிரிவில் சார்ஜன் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான சார்ஜன்  பயிற்சி கடந்த 2023/01/07 - 2023/01/14 வரையான காலப்பகுதியில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பொரளந்த பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.

இம்மாணவனுக்கு பாடசாலை அதிபரின் தலைமையில் பாராட்டு நிகழ்வு இன்று (16) பாடசாலையில் இடம்பெற்றது.

இதை வழி நடாத்தும் பாடசாலையில் உடற்கல்வி பாட ஆசிரியராக கடமையாற்றும்  பாடசாலை பொலிஸ் கெடற் பிரிவின் பிளட்ரூன் கொமாண்டர் லெப்டினன்ட் ஏ.எம்.எம்.கியாஸ்,  இம்மாணவனுக்கு தொடர் பயிற்சியினை வழங்கிய நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கெடற் இன்ஸ்ரெக்டர் எம்.சுதர்சன் (PC) மற்றும் இம் மாணவனுக்கு பயிற்சியினை பெற அனுமதி வழங்கிய  பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.



அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவன் பொலிஸ் கடேற் சார்ஜனாக பதவியுயர்வு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன்  அப்துல் நிஸார் ஷராபத் இஸ்னி பொலீஸ் கடேற் பிரிவில் சார்ஜன் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.பாதுகாப்பு மற்றும் கல்வி   அமைச்சு  என்பன இணைந்து பாடசாலை மாணவர்களை ஆளுமை உள்ளவர்களாக ஆக்குவதுடன் அவர்களை நாட்டுக்கு சிறந்த நற்பிரஜைகளாக மாற்றி அமைத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்திக்கொண்டிருக்கும் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியில் (National Cadet Corps) பொலீஸ் கடேற் பிரிவில் சார்ஜன் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.இவருக்கான சார்ஜன்  பயிற்சி கடந்த 2023/01/07 - 2023/01/14 வரையான காலப்பகுதியில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பொரளந்த பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.இம்மாணவனுக்கு பாடசாலை அதிபரின் தலைமையில் பாராட்டு நிகழ்வு இன்று (16) பாடசாலையில் இடம்பெற்றது.இதை வழி நடாத்தும் பாடசாலையில் உடற்கல்வி பாட ஆசிரியராக கடமையாற்றும்  பாடசாலை பொலிஸ் கெடற் பிரிவின் பிளட்ரூன் கொமாண்டர் லெப்டினன்ட் ஏ.எம்.எம்.கியாஸ்,  இம்மாணவனுக்கு தொடர் பயிற்சியினை வழங்கிய நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கெடற் இன்ஸ்ரெக்டர் எம்.சுதர்சன் (PC) மற்றும் இம் மாணவனுக்கு பயிற்சியினை பெற அனுமதி வழங்கிய  பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement