சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, போக்குவரத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி, நேற்று கொழும்பை சுற்றியுள்ள CCTV மூலம் அவதானிக்கப்பட்டுள்ள 158 போக்குவரத்து குற்றங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களை எச்சரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பாதையை மாற்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் நிறுத்தத்தில் நிற்காமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழக்குகளை பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பைச் சுற்றியுள்ள CCTV மூலம் 158 போக்குவரத்து விதிமீறல்களுக்கான எச்சரிக்கை.samugammedia சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, போக்குவரத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டது.அதன்படி, நேற்று கொழும்பை சுற்றியுள்ள CCTV மூலம் அவதானிக்கப்பட்டுள்ள 158 போக்குவரத்து குற்றங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களை எச்சரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, பாதையை மாற்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் நிறுத்தத்தில் நிற்காமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழக்குகளை பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.