• Nov 14 2024

அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார காலக்கேடு- ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு..!

Sharmi / Aug 23rd 2024, 8:35 am
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவை வழங்கியுள்ள நிலையில், அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஹரிஸை கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இடைநிறுத்தியதன் பின்னர் என்னை சந்திப்பதற்கு அவர் அனுமதி கோரியிருந்தார்.

நான் அதற்கு அனுமதியளிக்கவில்லை. தேர்தல் மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்ய வேண்டும், பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும் என்பதை கட்சி அறிவுறுத்தியிருந்தது.

அவரது குறைப்பாட்டை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

கட்சியின் உச்ச பீடத்துக்கு சத்தியகடதாசியை சமர்ப்பித்து அவரது நியாய காரணிகளும் கேட்கப்படும்.கட்சியின் உச்ச பீடமே தீர்மானத்தை எடுக்கும்.

கட்சியின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா இல்லையா என்பதை கட்சியின் உச்ச பீடம் தீர்மானிக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பதிலளிப்பதற்கு ஒருவார காலவகாசம் வழங்கியுள்ளோம். அவர் வழங்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார காலக்கேடு- ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவை வழங்கியுள்ள நிலையில், அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஹரிஸை கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இடைநிறுத்தியதன் பின்னர் என்னை சந்திப்பதற்கு அவர் அனுமதி கோரியிருந்தார்.நான் அதற்கு அனுமதியளிக்கவில்லை. தேர்தல் மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்ய வேண்டும், பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும் என்பதை கட்சி அறிவுறுத்தியிருந்தது.அவரது குறைப்பாட்டை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் உச்ச பீடத்துக்கு சத்தியகடதாசியை சமர்ப்பித்து அவரது நியாய காரணிகளும் கேட்கப்படும்.கட்சியின் உச்ச பீடமே தீர்மானத்தை எடுக்கும்.கட்சியின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா இல்லையா என்பதை கட்சியின் உச்ச பீடம் தீர்மானிக்கும்.பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பதிலளிப்பதற்கு ஒருவார காலவகாசம் வழங்கியுள்ளோம். அவர் வழங்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement