• Jul 31 2025

மணல் அகழ்வால் அழியும் அபாயத்துடன் அம்பன்; எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது!

shanuja / Jul 30th 2025, 12:07 pm
image

மணல் அகழ்வால் அம்பன் பிரதேசம் அழிந்துசெல்லும் அபாயத்தில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது என்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். 


நேற்று பிற்பகல் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் நல்லூர் ஆலயத்திற்க்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்கமுடியாது. நாம் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர்கள் அல்ல. 


கொட்டோடை கிராமம் கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்தனர். 


இதேவேளை எமது சபைக்கு சொந்தமான வீதி மணல் மண் ஏற்றிச்சென்றால் சேதமடையும் வீதிக்கான இழப்பீட்டை பெறுவதற்காகவே  அகழ்விற்கு அனுமதி வழங்கினேன். என்றார். 


இதேவேளை குறித்த அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் அகழ்வால் அழியும் அபாயத்துடன் அம்பன்; எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது மணல் அகழ்வால் அம்பன் பிரதேசம் அழிந்துசெல்லும் அபாயத்தில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது என்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் நல்லூர் ஆலயத்திற்க்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்கமுடியாது. நாம் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர்கள் அல்ல. கொட்டோடை கிராமம் கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்தனர். இதேவேளை எமது சபைக்கு சொந்தமான வீதி மணல் மண் ஏற்றிச்சென்றால் சேதமடையும் வீதிக்கான இழப்பீட்டை பெறுவதற்காகவே  அகழ்விற்கு அனுமதி வழங்கினேன். என்றார். இதேவேளை குறித்த அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement