• Dec 03 2024

அம்பானி மகன் திருமணம்: பணக்காரர் ஏழைகள் இடையில் பிரிவினையைத் தூண்டுகிறதா?

Sharmi / Jul 16th 2024, 10:07 am
image

நட்சத்திரங்கள் நிறைந்த அம்பானி திருமணம் இந்தியாவின் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிரிவினையை எடுத்துக்காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் கோடீஸ்வர தொழில் அதிபர்களின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ஆடம்பரமான நான்கு மாத திருமண கொண்டாட்டங்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் விமர்சனங்களை தூண்டியுள்ளது.


இந்த திருமணம்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, அவரது தந்தையின் $260bn-கூட்டமைப்பான ரிலையன்ஸ் இந்த நிகழ்வை பெரிதும் விளம்பரப்படுத்த  அது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியில் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளதெனவும் கூறப்படுகின்றது.

அதே நேரம் ரிலையன்ஸ் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் சமூக ஊடக பதிவுகள் திருமணத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளன என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.


ரிலையன்ஸின் பெயரிடப்படாத நிர்வாகி ஒருவர் இந்த நிகழ்வை "உலகளாவிய அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தின் சக்திவாய்ந்த சின்னம்" என்று கூறியுள்ளார்.

"மதிப்பிற்குரிய நபர்களின் இருப்பு இந்தியாவின் பொருளாதார, அரசியல், அறிவார்ந்த மற்றும் அறிவியல் வலிமையை எடுத்துக்காட்டுகிறது" என்றும் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பு ஒன்று கூறுகிறது.

எது எப்படியோ இந்தியாவில் சமத்துவமின்மை வளர்ந்து வரும் நேரத்தில் இந்த ஆடம்பரமான பாணக்காரர்களின் திருமணம் பல கேள்விகளை எழுப்புயுள்ளது.


ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான அம்பானி, ஆடம்பர விருந்துகளை நடத்துவதில் பிரபலமானவர்.

அம்பானியின் வாழ்வில் இது மிகவும் ஆடம்பரமான திருமண நிகழ்வென்றும் கூறப்படும் நிலையில், எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

அம்பானி மகன் திருமணம்: பணக்காரர் ஏழைகள் இடையில் பிரிவினையைத் தூண்டுகிறதா நட்சத்திரங்கள் நிறைந்த அம்பானி திருமணம் இந்தியாவின் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிரிவினையை எடுத்துக்காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் கோடீஸ்வர தொழில் அதிபர்களின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ஆடம்பரமான நான்கு மாத திருமண கொண்டாட்டங்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் விமர்சனங்களை தூண்டியுள்ளது.இந்த திருமணம்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, அவரது தந்தையின் $260bn-கூட்டமைப்பான ரிலையன்ஸ் இந்த நிகழ்வை பெரிதும் விளம்பரப்படுத்த  அது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியில் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளதெனவும் கூறப்படுகின்றது.அதே நேரம் ரிலையன்ஸ் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் சமூக ஊடக பதிவுகள் திருமணத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளன என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.ரிலையன்ஸின் பெயரிடப்படாத நிர்வாகி ஒருவர் இந்த நிகழ்வை "உலகளாவிய அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தின் சக்திவாய்ந்த சின்னம்" என்று கூறியுள்ளார்."மதிப்பிற்குரிய நபர்களின் இருப்பு இந்தியாவின் பொருளாதார, அரசியல், அறிவார்ந்த மற்றும் அறிவியல் வலிமையை எடுத்துக்காட்டுகிறது" என்றும் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பு ஒன்று கூறுகிறது.எது எப்படியோ இந்தியாவில் சமத்துவமின்மை வளர்ந்து வரும் நேரத்தில் இந்த ஆடம்பரமான பாணக்காரர்களின் திருமணம் பல கேள்விகளை எழுப்புயுள்ளது.ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான அம்பானி, ஆடம்பர விருந்துகளை நடத்துவதில் பிரபலமானவர்.அம்பானியின் வாழ்வில் இது மிகவும் ஆடம்பரமான திருமண நிகழ்வென்றும் கூறப்படும் நிலையில், எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement