• Mar 14 2026

ஈராக் வான்பரப்பில் வீழ்ந்த அமெரிக்க விமானம்; எரிபொருள் நிரப்பச் சென்ற போது நடந்த விபரீதம்!

shanu / Mar 13th 2026, 10:20 am
image


அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது.


“ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று சென்ட்கொம்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


“வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக் வான்பரப்பில் வீழ்ந்த அமெரிக்க விமானம்; எரிபொருள் நிரப்பச் சென்ற போது நடந்த விபரீதம் அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது.“ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று சென்ட்கொம்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement