• May 18 2024

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்காவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 1:43 pm
image

Advertisement

அமெரிக்காவின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியா வந்தடைந்துள்ளது.

உளவு செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சியில் தோல்வியை தழுவிய வடகொரியா, நேற்று மீண்டும் 2 குறுகிய தூர ஏவுகணை ஏவி பரிசோதித்தது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஜி.என் என்றழைக்கபடும் அணுசக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல், 6 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியாவின் புசான் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா - தென்கொரிய அதிபர்கள் ஒப்புக் கொண்டனர்.

அப்போது, வடகொரியாவின் தாக்குதலில் இருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் வண்ணம், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்படும் என அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்காவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்.samugammedia அமெரிக்காவின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியா வந்தடைந்துள்ளது.உளவு செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சியில் தோல்வியை தழுவிய வடகொரியா, நேற்று மீண்டும் 2 குறுகிய தூர ஏவுகணை ஏவி பரிசோதித்தது.இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஜி.என் என்றழைக்கபடும் அணுசக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல், 6 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியாவின் புசான் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா - தென்கொரிய அதிபர்கள் ஒப்புக் கொண்டனர்.அப்போது, வடகொரியாவின் தாக்குதலில் இருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் வண்ணம், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்படும் என அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement