• Nov 23 2024

கிளிநொச்சியில் கனமழைக்கு மத்தியில் அதிகரிக்கும் முதலைகளின் அட்டகாசம்...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 3:14 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி அக்கரையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்து கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிரமந்னாறு பகுதியில் நேற்றைய தினம்(17) இரவு முதலைக்கடிக்கு இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த  உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




கிளிநொச்சியில் கனமழைக்கு மத்தியில் அதிகரிக்கும் முதலைகளின் அட்டகாசம்.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி அக்கரையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்து கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.பிரமந்னாறு பகுதியில் நேற்றைய தினம்(17) இரவு முதலைக்கடிக்கு இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த  உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement