• May 04 2024

அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாய்..! புங்குடுதீவு ஆலய தேர்த்திருவிழாவில் நடந்த சம்பவம்!

Chithra / Apr 23rd 2024, 10:37 am
image

Advertisement


வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலையை  16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர்  வாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இடம்பெற்றது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து,

வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில் பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. 

அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர்  வாங்கியமை குறிப்பிடத்தக்கது.


அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாய். புங்குடுதீவு ஆலய தேர்த்திருவிழாவில் நடந்த சம்பவம் வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலையை  16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர்  வாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றையதினம் புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இடம்பெற்றது.இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து,வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில் பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர்  வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement