• Mar 18 2025

தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கிய அம்பாறை தபால் அலுவலக சேவைகள்-மக்கள் சிரமம்

Thansita / Mar 18th 2025, 6:18 pm
image

நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் இரு நாட்களாக முடங்கியுள்ளன.

இதன்படி கடந்த திங்கட்கிழமை உட்பட அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 7 தபால் நிலையங்கள் குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கிய அம்பாறை தபால் அலுவலக சேவைகள்-மக்கள் சிரமம் நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் இரு நாட்களாக முடங்கியுள்ளன.இதன்படி கடந்த திங்கட்கிழமை உட்பட அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 7 தபால் நிலையங்கள் குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement