• May 19 2024

மூளையை உண்ணும் அமீபாவால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழப்பு ! SamugamMedia

Tamil nila / Mar 3rd 2023, 9:51 pm
image

Advertisement

மூளையை உண்ணும் அமீபாவால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்லோட் கவுண்டியில் உள்ள புளோரிடா சுகாதாரத்துறை பெப்ரவரி 23 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. 

உலகளவில் மண் மற்றும் நன்னீரில் காணப்படும் ஒரு செல் உயிரினமான நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபா மூக்கு வழியாக மூளைக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. 

இதனையடுத்து அது மூளையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், சமநிலை இழப்பு, திசை திருப்பல், வலி போன்றவை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மூளையை உண்ணும் அமீபாவால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழப்பு SamugamMedia மூளையை உண்ணும் அமீபாவால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லோட் கவுண்டியில் உள்ள புளோரிடா சுகாதாரத்துறை பெப்ரவரி 23 அன்று இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. உலகளவில் மண் மற்றும் நன்னீரில் காணப்படும் ஒரு செல் உயிரினமான நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபா மூக்கு வழியாக மூளைக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனையடுத்து அது மூளையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், சமநிலை இழப்பு, திசை திருப்பல், வலி போன்றவை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement