• May 03 2024

ஈஸ்டர் தாக்குதலை போன்ற ஒரு தாக்குதல் யாழில் இடம்பெறும்...!போதகர்மார் ஆரூடம்- சிவசேனை மீது சரமாரியாக குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 9:38 am
image

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை போன்று யாழ் மாவட்டத்திலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறுமென இலங்கை கிறிஸ்தவ போதகர்மார் சங்கத்தின் வடக்கு கிழக்கு தலைவர் விக்டர் ஸ்ரான்லி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிறஸ்தவ போதகர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற செயற்பாடுகளை கண்டித்து இலங்கை கிறிஸ்தவ போதகர்மார் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பில் விக்டர் ஸ்ரான்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் அன்பையும் கொடுக்கின்ற சிவசேனை போன்ற அமைப்புகள் இந்த தாக்குதல்களை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கிறிஸ்வார்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டிருந்தாகவும் ஆனால் தற்போது அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தற்போது யாழ் மாவட்டத்தில் சிவசேனை அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் விக்டர் ஸ்ரான்லி குறிப்பிடுகின்றார்.

இந்த சிவசேனை அமைப்பு எதனை எதிர்பார்க்கின்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், யுத்தம் வேண்டும் இங்கு இரத்த ஆறு ஓடவேண்டும் என சிவசேனை அமைப்பு எதிர்பார்க்கின்றதா என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கிறிஸ்தவ அமைப்புகள் யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் ஆனால் சிவசேனை அமைப்பு அதனை தாம் மதம் மாற்றுவதற்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதாக குற்றம் சாட்டுவாதாகவும் ஒருவரும் ஒருவரை மதம் மாற்ற முடியாது என்றும் விக்டர் ஸ்ரான்லி குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் இருந்து சிவசேனை அமைப்பிற்கு பணம் வழங்கப்படுவதாகவும் அங்கே அவர்கள் செல்வதை இங்குள்ளவர்கள் செயற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பிரமாண்டமான இந்து கோயில்கள் உள்ளதாகவும் ஆனால் சிறிய அளவிலான சொரூபத்தை தாம் வைத்தால் அதனை பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக்கி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணத்தை சிவபூமி என குறிப்பிடுவதாகவும் எந்த எழுத்தில் இது சிவபூமி என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் விக்டர் ஸ்ரான்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை போன்ற ஒரு தாக்குதல் யாழில் இடம்பெறும்.போதகர்மார் ஆரூடம்- சிவசேனை மீது சரமாரியாக குற்றச்சாட்டு.samugammedia கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை போன்று யாழ் மாவட்டத்திலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறுமென இலங்கை கிறிஸ்தவ போதகர்மார் சங்கத்தின் வடக்கு கிழக்கு தலைவர் விக்டர் ஸ்ரான்லி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கிறஸ்தவ போதகர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற செயற்பாடுகளை கண்டித்து இலங்கை கிறிஸ்தவ போதகர்மார் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பில் விக்டர் ஸ்ரான்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்து மக்களின் அன்பையும் கொடுக்கின்ற சிவசேனை போன்ற அமைப்புகள் இந்த தாக்குதல்களை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் கிறிஸ்வார்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டிருந்தாகவும் ஆனால் தற்போது அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தற்போது யாழ் மாவட்டத்தில் சிவசேனை அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் விக்டர் ஸ்ரான்லி குறிப்பிடுகின்றார்.இந்த சிவசேனை அமைப்பு எதனை எதிர்பார்க்கின்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், யுத்தம் வேண்டும் இங்கு இரத்த ஆறு ஓடவேண்டும் என சிவசேனை அமைப்பு எதிர்பார்க்கின்றதா என்றும் குறிப்பிட்டிருந்தார்.கிறிஸ்தவ அமைப்புகள் யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் ஆனால் சிவசேனை அமைப்பு அதனை தாம் மதம் மாற்றுவதற்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதாக குற்றம் சாட்டுவாதாகவும் ஒருவரும் ஒருவரை மதம் மாற்ற முடியாது என்றும் விக்டர் ஸ்ரான்லி குறிப்பிடுகின்றார்.இந்தியாவில் இருந்து சிவசேனை அமைப்பிற்கு பணம் வழங்கப்படுவதாகவும் அங்கே அவர்கள் செல்வதை இங்குள்ளவர்கள் செயற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ் மாவட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பிரமாண்டமான இந்து கோயில்கள் உள்ளதாகவும் ஆனால் சிறிய அளவிலான சொரூபத்தை தாம் வைத்தால் அதனை பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக்கி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.யாழ்ப்பாணத்தை சிவபூமி என குறிப்பிடுவதாகவும் எந்த எழுத்தில் இது சிவபூமி என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் விக்டர் ஸ்ரான்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement