• May 20 2024

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊசி ஏற்ற சென்ற முதியவருக்கு ஏற்பட்ட நிலை! SamugamMedia

Chithra / Mar 25th 2023, 9:55 am
image

Advertisement

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊசி ஏற்றுவதற்காக சென்ற முதியவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (18) காலை 9 மணியளவில் கைதடி முதியோர் இல்லத்தினரால் முதியவர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளி நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு இருதய நோயாளிகளுக்கு மாதாந்தம் ஏற்றுகின்ற ஊசி ஏற்றுவதற்காக வெளிநோயாளர் பிரிவில் கடமை இருந்த வைத்தியரால் 6 ம் இலக்க விடுதிக்கு குறித்த முதியவரை அனுமதித்துள்ளார்.

எனினும் ஆறாம் இலக்க விடுதியில் 8 மணிக்கு கடமைக்கு வர வேண்டிய வைத்தியர் வராததால் அங்கு கடமையில் இருந்த தாதி முதியவரை திருப்பி அனுப்பியுள்ளார்.

எனினும் வெளிநோயாளர் பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் குறித்த நோயாளிக்கு ஊசி ஏற்றுமாறு கூறி மீண்டும் விடுதிக்கே அனுமதித்துள்ளார். ஆனால் விடுதியில் கடமையில் தாதி தன்னால் ஊசி ஏற்ற முடியாதென மீண்டும் திருப்பியனுப்பியுள்ளார்.

இந்நிலையில் 8 மணிக்கு கடமைக்கு வரவேண்டி வைத்தியர் மூன்று மணிநேரம் காலதாமதமாகி 11 மணிக்கு வந்த பின்னரே குறித்த முதியவருக்கு ஊசி ஏற்றி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளளது.

அரச முதியோர் இல்லத்தில் பாராமரிக்கப்படுகின்ற முதியவருக்கு சிகிச்சையளிக்க அலைக்கழிக்கப்பட்டமை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊசி ஏற்ற சென்ற முதியவருக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊசி ஏற்றுவதற்காக சென்ற முதியவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.கடந்த சனிக்கிழமை (18) காலை 9 மணியளவில் கைதடி முதியோர் இல்லத்தினரால் முதியவர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெளி நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு இருதய நோயாளிகளுக்கு மாதாந்தம் ஏற்றுகின்ற ஊசி ஏற்றுவதற்காக வெளிநோயாளர் பிரிவில் கடமை இருந்த வைத்தியரால் 6 ம் இலக்க விடுதிக்கு குறித்த முதியவரை அனுமதித்துள்ளார்.எனினும் ஆறாம் இலக்க விடுதியில் 8 மணிக்கு கடமைக்கு வர வேண்டிய வைத்தியர் வராததால் அங்கு கடமையில் இருந்த தாதி முதியவரை திருப்பி அனுப்பியுள்ளார்.எனினும் வெளிநோயாளர் பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் குறித்த நோயாளிக்கு ஊசி ஏற்றுமாறு கூறி மீண்டும் விடுதிக்கே அனுமதித்துள்ளார். ஆனால் விடுதியில் கடமையில் தாதி தன்னால் ஊசி ஏற்ற முடியாதென மீண்டும் திருப்பியனுப்பியுள்ளார்.இந்நிலையில் 8 மணிக்கு கடமைக்கு வரவேண்டி வைத்தியர் மூன்று மணிநேரம் காலதாமதமாகி 11 மணிக்கு வந்த பின்னரே குறித்த முதியவருக்கு ஊசி ஏற்றி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளளது.அரச முதியோர் இல்லத்தில் பாராமரிக்கப்படுகின்ற முதியவருக்கு சிகிச்சையளிக்க அலைக்கழிக்கப்பட்டமை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement