• May 20 2024

தாதியர் நியமனம் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Jun 3rd 2023, 2:40 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தாதியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் 3316 மாணவர் தாதியர்களை தாதியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2018-2019 கல்வியாண்டுகள் தொடர்பாக கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த மாணவர்கள் மற்றும் தாதியர் குழு நாடு முழுவதையும் உள்ளடக்கியதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர் தாதியர்களுக்கு இலங்கையில் உள்ள 16 தாதியர் கல்லூரிகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தாதியர் மாணவர்களை இணைத்துக் கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதால், மேலும் தாமதிக்காமல் விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தாதியர் நியமனம் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தாதியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் 3316 மாணவர் தாதியர்களை தாதியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.2018-2019 கல்வியாண்டுகள் தொடர்பாக கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த மாணவர்கள் மற்றும் தாதியர் குழு நாடு முழுவதையும் உள்ளடக்கியதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர் தாதியர்களுக்கு இலங்கையில் உள்ள 16 தாதியர் கல்லூரிகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய தாதியர் மாணவர்களை இணைத்துக் கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதால், மேலும் தாமதிக்காமல் விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement