• Apr 17 2026

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு வருகிறது எண்ணெய்க் கப்பல்!

Oil
Chithra / Apr 16th 2026, 9:17 pm
image

மத்திய கிழக்கு மோதல் நிலையில் இலங்கைக்கு வருகை தரும் முதல் மசகு எண்ணெய்க் கப்பல் நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளது என இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் அறிவித்துள்ளது.

அந்தக் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வருவதாக பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் ஒரு கப்பல் நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன் மூலம் இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பிரச்சினையாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் இருந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு வருகிறது எண்ணெய்க் கப்பல் மத்திய கிழக்கு மோதல் நிலையில் இலங்கைக்கு வருகை தரும் முதல் மசகு எண்ணெய்க் கப்பல் நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளது என இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் அறிவித்துள்ளது.அந்தக் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வருவதாக பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.இந்த மாத இறுதிக்குள் மேலும் ஒரு கப்பல் நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பிரச்சினையாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் இருந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement