வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரமொன்று முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(16) மதியம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகின்றது.
இந்நிலையில் இன்று மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன உடைந்து சேதமடைந்துள்ளது.
அத்துடன் மின்சார இணைப்பும் பாதிக்கப்பட்ட நிலையில் நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலத்த காற்றால் முறிந்து வீழ்ந்த பழமையான மரம்; வவுனியாவில் அரச விடுதி சேதம். வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழமையான மரமொன்று முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று(16) மதியம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகின்றது. இந்நிலையில் இன்று மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா புகையிரத நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக, அருகில் இருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன உடைந்து சேதமடைந்துள்ளது. அத்துடன் மின்சார இணைப்பும் பாதிக்கப்பட்ட நிலையில் நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.