• May 10 2024

ஐ.நா. சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீர் விலகல்

Chithra / Dec 18th 2022, 7:56 am
image

Advertisement

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தில் கடந்த 2001ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அவர் அந்த ஆணையத்தின் சிறப்பு தூதரக நியமிக்கப்பட்ட இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்துடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா அமைப்பில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், தீர்வுகளுக்கான அவர்களின் வாதங்களை ஆதரிப்பதற்கும் நான் மாற்று வழியில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன்.

அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக வரும் ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என கூறியுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி அகதிகளின் உரிமைகளுக்காக அயராது உழைத்தார் என்றும், அவர் உலகெங்கும் அகதிகளுக்கான விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கினார் என்றும் ஐ.நா. பாராட்டியுள்ளது. 

ஐ.நா. சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீர் விலகல் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியள்ளார்.ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தில் கடந்த 2001ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் அந்த ஆணையத்தின் சிறப்பு தூதரக நியமிக்கப்பட்ட இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்துடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த நிலையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா அமைப்பில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், தீர்வுகளுக்கான அவர்களின் வாதங்களை ஆதரிப்பதற்கும் நான் மாற்று வழியில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன்.அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக வரும் ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என கூறியுள்ளார்.ஏஞ்சலினா ஜோலி அகதிகளின் உரிமைகளுக்காக அயராது உழைத்தார் என்றும், அவர் உலகெங்கும் அகதிகளுக்கான விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கினார் என்றும் ஐ.நா. பாராட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement