பாராளுமன்றத்தில் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முஜீபூர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு வழங்கியுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.
டயனா கமகே, பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் அவருக்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஜீபூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முஜீபூர் ரகுமான் நியமனம். பாராளுமன்றத்தில் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முஜீபூர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு வழங்கியுள்ளது.சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.டயனா கமகே, பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் அவருக்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஜீபூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.