இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவற்றில்,16 சதங்களும் 45 அரைசதங்களும் அடங்குகின்றன
அத்துடன், 118 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் 33 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வை அறிவித்தார் அஞ்சலோ மெத்தியூஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவற்றில்,16 சதங்களும் 45 அரைசதங்களும் அடங்குகின்றன அத்துடன், 118 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் 33 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.