• May 17 2024

விஞ்ஞான பரிசோதனைகளுக்காக கொல்லப்படும் விலங்குகள் - விசாரணைகள் ஆரம்பம்

harsha / Dec 6th 2022, 7:17 pm
image

Advertisement

விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளதாக நியூரோலிங்க் நிறுவனத்தின் மீது அதன் ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அரச அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துளள்னர்.

நியூரோலிங்க் நிறுவனம் 2018ஆம் ஆணடு முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை, 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு அவசரகதியில் நடத்தப்பட்டதாகவும்  இதன் காரணமாக விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, உயிரிழப்புகளை சந்தித்தன அத்துடன், விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளன என்று நியூரோலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து அமெரிக்க அரச அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான பரிசோதனைகளுக்காக கொல்லப்படும் விலங்குகள் - விசாரணைகள் ஆரம்பம் விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளதாக நியூரோலிங்க் நிறுவனத்தின் மீது அதன் ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அரச அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துளள்னர்.நியூரோலிங்க் நிறுவனம் 2018ஆம் ஆணடு முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை, 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு அவசரகதியில் நடத்தப்பட்டதாகவும்  இதன் காரணமாக விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, உயிரிழப்புகளை சந்தித்தன அத்துடன், விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளன என்று நியூரோலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து அமெரிக்க அரச அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.எனினும் எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement