• Apr 27 2024

உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பரீட்சகர்களுக்கான அறிவிப்பு! samugammedia

Chithra / May 3rd 2023, 11:26 am
image

Advertisement

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் கால அவகாசம் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து இணையவழி (ஒன்லைன்) விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த எப்ரல் 27ஆம் திகதி முதல் நேற்று வரை இதற்காக 6 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் நாளைய தினம் (04.05.2023)  வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாகச் சமர்ப்பிக்க முடியுமெனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பௌதீக வியல் (01), இரசாயன வியல் (02), கணிதம் (07), விவசாய விஞ்ஞானம் (08), உயிரியல் (09), இணைந்த கணிதம் (10), தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் (29), வணிகக்கல்வி (32), பொறியியற் தொழில்நுட்பவியல் (65), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (66), தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (67) மற்றும் ஆங்கிலம் (73) ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதார்கள், தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின், அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2022.12. 31ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதிபெற்றவர்கள் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் கோரியுள்ளார். 


உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பரீட்சகர்களுக்கான அறிவிப்பு samugammedia 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன் கால அவகாசம் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து இணையவழி (ஒன்லைன்) விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.அதன்படி, கடந்த எப்ரல் 27ஆம் திகதி முதல் நேற்று வரை இதற்காக 6 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் நாளைய தினம் (04.05.2023)  வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாகச் சமர்ப்பிக்க முடியுமெனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பௌதீக வியல் (01), இரசாயன வியல் (02), கணிதம் (07), விவசாய விஞ்ஞானம் (08), உயிரியல் (09), இணைந்த கணிதம் (10), தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் (29), வணிகக்கல்வி (32), பொறியியற் தொழில்நுட்பவியல் (65), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (66), தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (67) மற்றும் ஆங்கிலம் (73) ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பதார்கள், தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின், அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த 2022.12. 31ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதிபெற்றவர்கள் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement