• May 09 2024

யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் தம்பலகாமத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு...!

Sharmi / Apr 27th 2024, 4:08 pm
image

Advertisement

காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,   காணாமல் போனோர்களின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரனை இன்று (27)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது 

கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம்,கந்தளாய், திருகோணமலை பட்டினமும்,மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன.

இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன. 

இதில் காணாமல் போன அலுவலக  தவிசாளர்,மன்னார், மட்டக்களப்பு,யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரனைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.



யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் தம்பலகாமத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு. காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,   காணாமல் போனோர்களின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரனை இன்று (27)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம்,கந்தளாய், திருகோணமலை பட்டினமும்,மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன. இதில் காணாமல் போன அலுவலக  தவிசாளர்,மன்னார், மட்டக்களப்பு,யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரனைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement