• May 09 2024

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மனின் நினைவேந்தல் நிகழ்வு...!

Sharmi / Apr 27th 2024, 2:15 pm
image

Advertisement

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம்(27)  யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. 

 யாழ் ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில்,  யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். 

 ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

 ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை நிறுவனமொன்றின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மனின் நினைவேந்தல் நிகழ்வு. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம்(27)  யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.  யாழ் ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில்,  யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.  ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை நிறுவனமொன்றின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement