• May 13 2024

அரச சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு - நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia

Chithra / Oct 5th 2023, 10:25 am
image

Advertisement

 

2024 ஆம் ஆண்டு முதல் அரச துறைக்கு முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மதிப்பீட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது நிதி முகாமைத்துவத்தில் உள்ள பலவீனங்களைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணி சரியான மதிப்பீட்டு செயல்முறையைப் பேணுவதாகும்.

முறையான மதிப்பீட்டுச் செயற்பாடுகள் இன்றி அரசாங்கம் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் எனவும், நாட்டின் நிலையான அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு வெற்றிகரமான மதிப்பீட்டுச் செயற்பாடு அவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மதிப்பீட்டுச் செயல்முறையானது மக்களின் வரிப்பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்குப் பொறுப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தவும் வழிவகுக்கிறது என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு - நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia  2024 ஆம் ஆண்டு முதல் அரச துறைக்கு முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தேசிய மதிப்பீட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொது நிதி முகாமைத்துவத்தில் உள்ள பலவீனங்களைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணி சரியான மதிப்பீட்டு செயல்முறையைப் பேணுவதாகும்.முறையான மதிப்பீட்டுச் செயற்பாடுகள் இன்றி அரசாங்கம் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் எனவும், நாட்டின் நிலையான அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு வெற்றிகரமான மதிப்பீட்டுச் செயற்பாடு அவசியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மதிப்பீட்டுச் செயல்முறையானது மக்களின் வரிப்பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்குப் பொறுப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தவும் வழிவகுக்கிறது என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement