• May 18 2024

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு...! ஐ.நா அலுவலகத்தில் கையளித்த சிறீதரன் எம்.பி...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 10:28 am
image

Advertisement

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு கடந்த 02ம் திகதி கிளிநொச்சி நகரில்  கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்க்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச்சிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்று முன்தினம் (04) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.


நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு. ஐ.நா அலுவலகத்தில் கையளித்த சிறீதரன் எம்.பி.samugammedia இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு கடந்த 02ம் திகதி கிளிநொச்சி நகரில்  கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்க்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச்சிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்று முன்தினம் (04) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement