• Nov 28 2024

அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jul 5th 2024, 11:39 am
image

 

சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்க கட்டளைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் பொருட்களின் விடுவிப்பு பணிகளை மீட்டெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு  சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.சுங்க கட்டளைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.எனினும், இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் பொருட்களின் விடுவிப்பு பணிகளை மீட்டெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement