• Oct 02 2025

பேருந்து கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

Bus
Chithra / Oct 1st 2025, 7:36 pm
image

  

எரிபொருள் விலைக் குறைப்பின்படி, பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைய தினத்திற்குள் தீர்மானத்தை வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவுகோலின்படி பேருந்துக் கட்டணங்களைக் குறைக்கும் என்றும், அந்த அளவுகோலின்படி பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பதை கணக்கிடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகள் தற்போது 2 சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பேருந்து கட்டணங்களில் குறைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமானால், எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலை குறைந்தபட்சம் 4 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டும். 

இருப்பினும், தற்போதைய விலை திருத்தமானது 1.58 சதவீத குறைப்பை மாத்திரம் பிரதிபலிக்கிறது. 

எனவே, பேருந்துப் பயணக் கட்டணத் திருத்தத்திற்கு வழிவகுக்கவில்லை என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.  

நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 277 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பேருந்து கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு   எரிபொருள் விலைக் குறைப்பின்படி, பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைய தினத்திற்குள் தீர்மானத்தை வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவுகோலின்படி பேருந்துக் கட்டணங்களைக் குறைக்கும் என்றும், அந்த அளவுகோலின்படி பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பதை கணக்கிடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.எரிபொருள் விலைகள் தற்போது 2 சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இந்நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களில் குறைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமானால், எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலை குறைந்தபட்சம் 4 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போதைய விலை திருத்தமானது 1.58 சதவீத குறைப்பை மாத்திரம் பிரதிபலிக்கிறது. எனவே, பேருந்துப் பயணக் கட்டணத் திருத்தத்திற்கு வழிவகுக்கவில்லை என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.  நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 277 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement