• May 08 2024

விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! samugammedia

Chithra / May 28th 2023, 12:55 pm
image

Advertisement

மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு இவ்வருட தேசிய பொசன் விழாவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பொசன் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொசன் வாரம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் விசேட புகையிரத பயணங்களை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, புறக்கோட்டையில் ஜெயாவில் இருந்து அனுராதபுரம் வரை தற்போதுள்ள 10 ரயில் பயணங்களுக்கு மேலதிகமாக மேலும் 10 புதிய ரயில்கள் சேவையில் இணைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், இந்த வருடம் பொசன் பண்டிகையின் போது 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பன தெரிவிக்கின்றன.


விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு samugammedia மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு இவ்வருட தேசிய பொசன் விழாவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்த ஆண்டு பொசன் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பொசன் வாரம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.குறித்த காலப்பகுதியில் விசேட புகையிரத பயணங்களை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.இதன்படி, புறக்கோட்டையில் ஜெயாவில் இருந்து அனுராதபுரம் வரை தற்போதுள்ள 10 ரயில் பயணங்களுக்கு மேலதிகமாக மேலும் 10 புதிய ரயில்கள் சேவையில் இணைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.அத்துடன், இந்த வருடம் பொசன் பண்டிகையின் போது 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பன தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement