• May 04 2024

வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்க செயலி..!அரசாங்கம் அதிரடி..!samugammedia

Sharmi / May 28th 2023, 1:00 pm
image

Advertisement

குடும்ப உறவில் ஆண்களின் பங்களிப்பை கண்காணிப்பதற்காக  ஸ்பெயின் அரசாங்கம் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

இன்றைய நவீன உலகில் பொருளாதார தேவைகளுக்காக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் குடும்பம் மற்றும் அதற்கு தேவையான காரணிகளை செய்வது பெரும்பாலும் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

விலங்குகள் என்றாலும் சரி மனிதர்கள் என்றாலும் சரி இனப்பெருக்கம், பொருளீட்டல் ஆகியவை ஆண்களின் கடமையாகவும், குழந்தையை பெற்று வளர்ப்பது,  குடும்பத்தை பேணிக் காப்பதும் பெண்களின் பொறுப்பாகவும் இயல்பாக மாறியுள்ளது.

இந்நிலையில், ஆண்களின் பங்களிப்பினை கண்டறிய ஸ்பெயின் அரசாங்கம் ஒரு செல்போன் ஆப்பை அறிமுகம் செய்யவுள்ளது.

இது பாலின சமத்துவத்தை கணக்கிட பயன்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசின் சமத்துவத்துறை செயலாளர் ஏஞ்செல ரோட்ரிகுஷ் தெரிவித்துள்ளார்.

குடும்பம் அல்லது ஆண்,  பெண் என்ற உறவு என்று வரும் பொழுது , ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும்,  ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்கவும், உறவுகளில் அவர்களின் செயற்பாடுகளை விவரிக்கவும் இந்த செயலி உருவாக்கப்பட்டதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளது.

வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்க செயலி.அரசாங்கம் அதிரடி.samugammedia குடும்ப உறவில் ஆண்களின் பங்களிப்பை கண்காணிப்பதற்காக  ஸ்பெயின் அரசாங்கம் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. இன்றைய நவீன உலகில் பொருளாதார தேவைகளுக்காக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் குடும்பம் மற்றும் அதற்கு தேவையான காரணிகளை செய்வது பெரும்பாலும் பெண்களாகவே காணப்படுகின்றனர். விலங்குகள் என்றாலும் சரி மனிதர்கள் என்றாலும் சரி இனப்பெருக்கம், பொருளீட்டல் ஆகியவை ஆண்களின் கடமையாகவும், குழந்தையை பெற்று வளர்ப்பது,  குடும்பத்தை பேணிக் காப்பதும் பெண்களின் பொறுப்பாகவும் இயல்பாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆண்களின் பங்களிப்பினை கண்டறிய ஸ்பெயின் அரசாங்கம் ஒரு செல்போன் ஆப்பை அறிமுகம் செய்யவுள்ளது. இது பாலின சமத்துவத்தை கணக்கிட பயன்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசின் சமத்துவத்துறை செயலாளர் ஏஞ்செல ரோட்ரிகுஷ் தெரிவித்துள்ளார்.குடும்பம் அல்லது ஆண்,  பெண் என்ற உறவு என்று வரும் பொழுது , ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும்,  ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்கவும், உறவுகளில் அவர்களின் செயற்பாடுகளை விவரிக்கவும் இந்த செயலி உருவாக்கப்பட்டதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement