• Oct 23 2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்! வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் samugammedia

Chithra / May 24th 2023, 7:27 am
image

Advertisement

முல்லைத்தீவு - வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 6 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கு நேற்றையதினம் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரிகள்  அறிவுறுத்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

குறித்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 


1. உணவகம் (ஹோட்டல்) சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்கள் (ஜஸ்கிறீம் கடை, ஜஸ்கிறீம் வாகனம், பூந்தி இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர் கடைகள் ) இவை அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளுராட்சி சபைகளின் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஜஸ்கிறீம் உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர், சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.


3. சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமே ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்தல் வேண்டும். அத்துடன் அதற்கான பற்றுச் சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

4. உணவகத்திற்கும் சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் சனிக்கிழமை (03.06.2023) மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும்.


5. காவடி உரிமையாளர்கள் அயடின் கரைலில் செடில்களை கட்டாயமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

6. சிகரெட், புகையிலை, மதுசாரம் ஆகியன ஆலய வளாகத்தினுள்ளே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் samugammedia முல்லைத்தீவு - வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 6 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கு நேற்றையதினம் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரிகள்  அறிவுறுத்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.குறித்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1. உணவகம் (ஹோட்டல்) சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்கள் (ஜஸ்கிறீம் கடை, ஜஸ்கிறீம் வாகனம், பூந்தி இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர் கடைகள் ) இவை அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளுராட்சி சபைகளின் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும்.2. ஜஸ்கிறீம் உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர், சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.3. சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமே ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்தல் வேண்டும். அத்துடன் அதற்கான பற்றுச் சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.4. உணவகத்திற்கும் சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் சனிக்கிழமை (03.06.2023) மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும்.5. காவடி உரிமையாளர்கள் அயடின் கரைலில் செடில்களை கட்டாயமாக கழுவி பயன்படுத்த வேண்டும்.6. சிகரெட், புகையிலை, மதுசாரம் ஆகியன ஆலய வளாகத்தினுள்ளே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement