• Feb 04 2025

புதிய முகமூடியுடன் எம்மை அடக்க நினைக்கும் அநுர அரசு- மட்டக்களப்பிலும் வெடித்த போராட்டம்!

Chithra / Feb 4th 2025, 3:41 pm
image


 

பல்வேறு அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள், நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும் போது நாங்கள் ஒடுக்கப்படுவதா, உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும், நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு, சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு, எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணியானது பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சென்றடைந்ததும் அங்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மூன்று மாவட்ட தலைவிகள் மற்றும் உறவினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நாடாளுமன்றகுழு பேச்சாளருமான ஞா.சிறீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் செங்கலடியில் நடாத்தப்பட்டது. 

இன்று காலை தொடக்கம் மூன்று மாவட்டங்களிலும் புலனாய்வாளர்கள் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்களை அச்சுறுத்திய நிலையிலும் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட  உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

எமது வீட்டுக்குள் இருந்து எமது உரிமையினையும் எமது ஜனநாயகத்தினை நிலைநாட்ட அனுமதிக்காத இந்த புதிய அரசாங்கம் முகமூடியுடன் தம்மை அடக்க நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


புதிய முகமூடியுடன் எம்மை அடக்க நினைக்கும் அநுர அரசு- மட்டக்களப்பிலும் வெடித்த போராட்டம்  பல்வேறு அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள், நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும் போது நாங்கள் ஒடுக்கப்படுவதா, உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும், நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு, சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு, எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணியானது பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சென்றடைந்ததும் அங்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மூன்று மாவட்ட தலைவிகள் மற்றும் உறவினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நாடாளுமன்றகுழு பேச்சாளருமான ஞா.சிறீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் செங்கலடியில் நடாத்தப்பட்டது. இன்று காலை தொடக்கம் மூன்று மாவட்டங்களிலும் புலனாய்வாளர்கள் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்களை அச்சுறுத்திய நிலையிலும் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட  உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.எமது வீட்டுக்குள் இருந்து எமது உரிமையினையும் எமது ஜனநாயகத்தினை நிலைநாட்ட அனுமதிக்காத இந்த புதிய அரசாங்கம் முகமூடியுடன் தம்மை அடக்க நினைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement