தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரிகளை மேலும் அதிகரிக்கும் என பிவித்துரு ஹெல உரிமைய கட்சியின் தலைவர் உதயகமன்பில தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தற்பொழுது அமுலில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணும் எனவும் புதிதாக சொத்து வரிகளை விதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் அடிப்படையில் அரச வருமானங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 வீதம் வரையில் அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணுவதுடன் மேலும் வரிகளை விதிக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றி அமைக்க யோசனை முன்வைத்த போதிலும் அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் நிவாரணங்கள் வழங்கப்படாவிட்டால் மக்களை ஏமாற்றியதாக மக்கள் கோபித்துக் கொள்வார்கள் எனவும் இதனால் அரசியல் நெருக்கடி நிலை உருவாகும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கம் வரிகளை மேலும் அதிகரிக்கும் சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரிகளை மேலும் அதிகரிக்கும் என பிவித்துரு ஹெல உரிமைய கட்சியின் தலைவர் உதயகமன்பில தெரிவித்துள்ளார்.கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தற்பொழுது அமுலில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணும் எனவும் புதிதாக சொத்து வரிகளை விதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் அடிப்படையில் அரச வருமானங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 வீதம் வரையில் அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.அதாவது பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணுவதுடன் மேலும் வரிகளை விதிக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றி அமைக்க யோசனை முன்வைத்த போதிலும் அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் நிவாரணங்கள் வழங்கப்படாவிட்டால் மக்களை ஏமாற்றியதாக மக்கள் கோபித்துக் கொள்வார்கள் எனவும் இதனால் அரசியல் நெருக்கடி நிலை உருவாகும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.