அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பணி நீக்கம் என்பது வேலை வாய்ப்பில் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்துமே தவிர அதனால் தீர்வு எதுவும் ஏற்படாது.
அதேநேரம் எதிர்காலத்தில் அரசசேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உற்பத்தி திறன் கவனிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் உற்பத்தித்திறன் அம்சத்தில் கவனம் செலுத்தாமல் தற்காலிக முறையில் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பு செய்தனர்.
அது எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் - வெளியான அநுர அரசின் நிலைப்பாடு அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாறாக உற்பத்தியை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பணி நீக்கம் என்பது வேலை வாய்ப்பில் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்துமே தவிர அதனால் தீர்வு எதுவும் ஏற்படாது.அதேநேரம் எதிர்காலத்தில் அரசசேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உற்பத்தி திறன் கவனிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் உற்பத்தித்திறன் அம்சத்தில் கவனம் செலுத்தாமல் தற்காலிக முறையில் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்பு செய்தனர். அது எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.