• Apr 27 2024

26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்! கல்வியமைச்சு நடவடிக்கை

Chithra / Jan 30th 2023, 12:05 pm
image

Advertisement

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.


40 வயதுக்குட்பட்ட அரச பணியில் பணிபுரியும் எந்தப் பட்டதாரியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் கல்வியமைச்சு நடவடிக்கை பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.40 வயதுக்குட்பட்ட அரச பணியில் பணிபுரியும் எந்தப் பட்டதாரியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement