• Jan 11 2025

சிறைச்சாலையில் துமிந்த சில்வாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகிறதா? முற்றாக நிராகரித்த திணைக்களம்

Chithra / Jan 5th 2025, 8:27 am
image

  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாகக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. 

கொழும்பில் நேற்றுறு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

குறித்த வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கமையவே, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் வைத்தியர்களே, அங்கு கடமையாற்றி வருகின்றனர். 

எவ்வாறாயினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சுமார் 65 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள, சிறைச்சாலை வைத்தியசாலையில் சாதாரண விடுதியிலேயே சிகிச்சை பெற்று வருவதுடன், அங்கு அவர், பொதுவான கழிப்பறைகளையே உபயோகிக்கின்றார். 

அவருக்குப் பணிவிடைகள் செய்வதற்காக பிற கைதிகள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் எனசிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் துமிந்த சில்வாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகிறதா முற்றாக நிராகரித்த திணைக்களம்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாகக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. கொழும்பில் நேற்றுறு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கமையவே, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் வைத்தியர்களே, அங்கு கடமையாற்றி வருகின்றனர். எவ்வாறாயினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சுமார் 65 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள, சிறைச்சாலை வைத்தியசாலையில் சாதாரண விடுதியிலேயே சிகிச்சை பெற்று வருவதுடன், அங்கு அவர், பொதுவான கழிப்பறைகளையே உபயோகிக்கின்றார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதற்காக பிற கைதிகள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் எனசிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement