விசேட பிரமுகர்களின் (VIP) வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வீதி மூடல்களை அமல்படுத்தவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரமுகர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக கொழும்பில் வீதியொன்று பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக வைரலான காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வைரலான காட்சி குறித்தும் பதிலளித்த அவர்,
இது அண்மையக் காட்சி அல்ல, இது பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காட்சி என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
மேலும், இந்த வீடியோவைப் பற்றி காவல்துறையினருக்குத் தெரியும் என்றும், எந்த பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்கும் வீதிகள் மூடப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
விசேட பிரமுகர்களின் வாகன பயணத்துக்காக வீதிகள் மூடப்பட்டதா – பொலிஸார் விளக்கம் விசேட பிரமுகர்களின் (VIP) வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வீதி மூடல்களை அமல்படுத்தவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.பிரமுகர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக கொழும்பில் வீதியொன்று பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக வைரலான காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.வைரலான காட்சி குறித்தும் பதிலளித்த அவர், இது அண்மையக் காட்சி அல்ல, இது பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காட்சி என்று தான் நம்புவதாகவும் கூறினார்.மேலும், இந்த வீடியோவைப் பற்றி காவல்துறையினருக்குத் தெரியும் என்றும், எந்த பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்கும் வீதிகள் மூடப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.