• May 17 2024

யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்; இன்று வர்த்தமானி அறிவித்தல்?

Chithra / Jan 21st 2023, 7:24 am
image

Advertisement

யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இ.ஆர்னோல்டை நிய மித்து இன்றையதினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாநகரசபையின் 45 உறுப்பினர் களில் 24 உறுப்பினர்கள் இதன்போது சபையில் பிரசன்னமாகி இருந்தனர். 

24 பேர் சபையில் இருப்பதால் கோரம் உள்ளமையால் மேயர் தெரிவை உள்ளூராட்சி ஆணையாளர் தொடங்கினார். இதற்கு அமைவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இ.ஆர் னோல்ட்டின் பெயரை உறுப்பினர் பி.இ. கிறேசியன் முன்மொழிய உறுப்பினர் என்.எம். பாலச்சந்திரன் வழிமொழிந்த போது வேறு பெயர்கள் சபையில் முன் மொழியப்படவில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் மு. ரெமிடியஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்களுமாக 4 பேர். இந்தத் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறுவதாகக்கூறி சபையிலிருந்து வெளியேறினர்.

இதையடுத்து முதல்வரைத் தெரிவுசெய்வதற்குப் போதிய கோரம் இல்லையென்று உள்ளூராட்சி ஆணையாளர் சபையை ஒத்திவைத்தார். இதற்கு ஆர்னோல்ட் அணியினர் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். முதல்வர் தெரிவுக்காக பெயர் பிரேரிக்கப்பட்டபோது சபையில் போதிய கோரம் இருந்தது. 

அதன் பின்னர் வெளிநடப்புச் செய்ததைக் காரணமாகக் குறிப்பிட்டு தெரிவை ஒத்திவைக்க முடியாது என்பது ஆர்னோல்ட் தரப்பின் வாதமாக இருந்தது. 

எனவே ஆர்னோல்டை முதல்வராக அறிவிக்கவேண்டும் என்றும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆர்னோல்ட் தரப்பு கடிதம் அனுப்பியது. இது தொடர்பில் ஆளுநரும் தலையீடு செய்தார் என்று அறியமுடிகின்றது. 

இவ்வாறாக அழுத்தங்கள் வழங்கப்பட்ட பின்னணியிலேயே ஆர்னோல்டை முதல்வராக அறிவித்து இன்று வர்த்தமானி வெளிவரவுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்; இன்று வர்த்தமானி அறிவித்தல் யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இ.ஆர்னோல்டை நிய மித்து இன்றையதினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாநகரசபையின் 45 உறுப்பினர் களில் 24 உறுப்பினர்கள் இதன்போது சபையில் பிரசன்னமாகி இருந்தனர். 24 பேர் சபையில் இருப்பதால் கோரம் உள்ளமையால் மேயர் தெரிவை உள்ளூராட்சி ஆணையாளர் தொடங்கினார். இதற்கு அமைவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இ.ஆர் னோல்ட்டின் பெயரை உறுப்பினர் பி.இ. கிறேசியன் முன்மொழிய உறுப்பினர் என்.எம். பாலச்சந்திரன் வழிமொழிந்த போது வேறு பெயர்கள் சபையில் முன் மொழியப்படவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் மு. ரெமிடியஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்களுமாக 4 பேர். இந்தத் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறுவதாகக்கூறி சபையிலிருந்து வெளியேறினர்.இதையடுத்து முதல்வரைத் தெரிவுசெய்வதற்குப் போதிய கோரம் இல்லையென்று உள்ளூராட்சி ஆணையாளர் சபையை ஒத்திவைத்தார். இதற்கு ஆர்னோல்ட் அணியினர் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். முதல்வர் தெரிவுக்காக பெயர் பிரேரிக்கப்பட்டபோது சபையில் போதிய கோரம் இருந்தது. அதன் பின்னர் வெளிநடப்புச் செய்ததைக் காரணமாகக் குறிப்பிட்டு தெரிவை ஒத்திவைக்க முடியாது என்பது ஆர்னோல்ட் தரப்பின் வாதமாக இருந்தது. எனவே ஆர்னோல்டை முதல்வராக அறிவிக்கவேண்டும் என்றும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆர்னோல்ட் தரப்பு கடிதம் அனுப்பியது. இது தொடர்பில் ஆளுநரும் தலையீடு செய்தார் என்று அறியமுடிகின்றது. இவ்வாறாக அழுத்தங்கள் வழங்கப்பட்ட பின்னணியிலேயே ஆர்னோல்டை முதல்வராக அறிவித்து இன்று வர்த்தமானி வெளிவரவுள்ளதாகத் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement