• Sep 19 2024

முடிந்தால் கைது செய்யுங்கள் : தி.மு.கவிற்கு சவால் விடும் அண்ணாமலை! SamugamMedia

Tamil nila / Mar 5th 2023, 3:48 pm
image

Advertisement

தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுதொடர்பாக தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடையதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. 


பீகாரை சேர்ந்த சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 


இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 


அதில் வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுகட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய பிரசாரமே தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார். 


இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.  


அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள். திறனற்ற தி.மு.க.வுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் எனத் தெரிவித்துள்ளார். 


முடிந்தால் கைது செய்யுங்கள் : தி.மு.கவிற்கு சவால் விடும் அண்ணாமலை SamugamMedia தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடையதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுகட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய பிரசாரமே தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார். இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.  அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள். திறனற்ற தி.மு.க.வுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement