• May 20 2024

சரத்வீரசேகரவை கைது செய்...! யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Aug 25th 2023, 10:06 am
image

Advertisement

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைவரையும் கைது செய்யக் கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன்பாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா இன்று(25) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அண்மைக் காலமாக நீதித்துறை உட்பட தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் விதமாக சிங்களத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனையோர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதி்க்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் , தமிழர்களின் தலைகளைக் கொய்து வருவேன் என கூறிய மேர்வின் சில்வா உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.


சரத்வீரசேகரவை கைது செய். யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு.samugammedia நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைவரையும் கைது செய்யக் கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன்பாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா இன்று(25) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தார்.அண்மைக் காலமாக நீதித்துறை உட்பட தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் விதமாக சிங்களத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனையோர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதி்க்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் , தமிழர்களின் தலைகளைக் கொய்து வருவேன் என கூறிய மேர்வின் சில்வா உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement