• Sep 20 2024

கிழக்கு மாகாண ஆளுநரின் யோசனையின் படி தேனி வளர்க்கும் திட்டம் ஆரம்பம்!

Tamil nila / Dec 2nd 2022, 3:46 pm
image

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநரின் யோசனையின் அடிப்படையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிறு பயிர் ஏற்றுமதி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்கு 1000 தேனீப்  பெட்டிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் பூர்வாங்க வேலைகள் அண்மையில் கோமரன்கடவல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 


இங்கு மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் தேனீ வளர்ப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பணியினை மேற்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்துவது, தேனீ வளர்ப்பு கிராமங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் தேன் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கும் இதற்கான உதவி கிடைத்துள்ளது. இந் நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, கோமரன்கடவல பிரதேச செயலாளர் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.


கிழக்கு மாகாண ஆளுநரின் யோசனையின் படி தேனி வளர்க்கும் திட்டம் ஆரம்பம் கிழக்கு மாகாண ஆளுநரின் யோசனையின் அடிப்படையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிறு பயிர் ஏற்றுமதி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்கு 1000 தேனீப்  பெட்டிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் பூர்வாங்க வேலைகள் அண்மையில் கோமரன்கடவல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் தேனீ வளர்ப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பணியினை மேற்கொண்டனர்.இந்த விழிப்புணர்வு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்துவது, தேனீ வளர்ப்பு கிராமங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் தேன் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கும் இதற்கான உதவி கிடைத்துள்ளது. இந் நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, கோமரன்கடவல பிரதேச செயலாளர் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement